Skip to main content

Posts

Showing posts from July, 2016

அழகு போர் அடிக்காதிருக்கட்டும் !

            ஒரு தேசத்தில் 4 அழகிகளும் நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர். அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர். இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான் 4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால் அங்கு பூசல்கள் மூண்டன. கலவரங்கள் வெடித்தன. முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர். வீதிகளில் பிணங்கள் கிடந்தன வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன. அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது. “ ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன் கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன் எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை.. ” முன்வரலாறு சொன்னார் குலகுரு. உடனே யாககுண்டத்தில் தீ வளர்த்து கண்ணீர் வார்த்து ரிஷியை வரவழைத்தனர். செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும் அவருக்கு கண் கலங்கி விட்டது. மனம் இரங்கி விட்டது. 32000 : 32000 என்று அழகின் சமன்குலைவை நீக்கியருளினார். தேசத்தில் அமைதி திரும்பியது. ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர். விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களை

நத்திங் ஸ்பெஷல் ?

                                                                      கைகளற்ற ஒருவன் தன் காலால் திருவள்ளுவரை வரைந்து காட்டிவிட்டான். இதில் ஒரு சுவாரஸ்யம் கிட்டிவிட்டது. எனவே அவனுக்கு நமது நாளிதழ்களில் ஒரு போட்டோவும் கிடைத்து விட்டது. சுவாரஸ்யமற்ற முடவர்கள் சுவாரஸ்யமற்ற குருடர்கள் சுவாரஸ்யமற்ற ஊமைகள் மூத்திரச்சந்துகளில் ஒளிந்து கொள்கிறார்கள்.                                                            நன்றி : காலச்சுவடு : ஜுலை: 2016 

இடமுலை வடிவக்கல்

                                                      ஒரு வழியாக கவர்மெண்ட் கக்கூஸிலிருந்து வெளியே வந்து விட்டான்     துரத்தியடித்த நாய்களில் ஒன்று     திரும்ப வந்து உறுமி நிற்கிறது     நடப்பதும் ஊர்வதும் கண்ட அதற்கு     தவழ்வது பிடிக்கவில்லை    இவன் பாக்கெட்டில் கைவிட்டுத் தேடினான்    இன்னுமொரு கல் மிச்சமிருந்தது.    அதை எடுத்து ஓங்கி எறிந்தான்    மொழியியல் வல்லுனனும்    தன்னம்பிக்கைப் புழுத்தியும்    திடுக்கிட்டு எழுந்திருக்க    உடைந்து சிதறியது    ” மாற்றுத்திறனாளி ”  எனும் சொற்கட்டு.                   நன்றி : காலச்சுவடு - ஜுலை - 2016

சுபம்

           அவன் இங்கு வந்ததே அந்த வெள்ளிக்கிழமைக்காகத் தான். அதன் முலையழுந்த அணைக்கத்தான். புதன் வரை  பொறுத்துவிட்டான். அதற்கு மேல் ஆகவில்லை. இந்த வியாழன் ஓர் இடைஞ்சல் ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே அதை கடந்து விடத் துடித்தான் தன்னை ஒருவன் தாண்டிப் போவதை பொறாது   வியாழன் வாய் பிளந்து கத்தியது   . வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது காதலின் கனலி சில மண்டைகளை உடைத்துப் போட்டான் சில கால்களை முறித்துப் போட்டான் சில தலைகளை திருப்பி வைத்தான் கடைசியில் ஒரு தந்திரன் புதனின் கழுத்தில் கத்தியை வைத்து பிடித்துக்கொண்டான் காலம் ஸ்தம்பித்து நின்று விட்டது வேறு வழியற்ற காதலன்   “வெள்ளி வேண்டும்.. ” , “ வெள்ளி வேண்டும் “ என்றவன் காலில் விழுந்து கதறினான் வெற்றி தந்த களிப்பில் அவன் அண்ணாந்து சிரிக்க, கண் பிழைத்த அக்கணத்தில் அவன் கால்களை பற்றியிழுத்து ஓங்கித் தரையில் அடித்தான் ஓடினான்.. வேகமெடுத்து ஓடினான்... புதனில் அழுந்தக் காலூன்றி ஒரே ஒரு தாவு.... துப்பாக்கி ரவைகளுக்கும், கையெறி குண்டுகளுக்கும் தப்பி வெள்ளியின் நிலத்தில் விழுந

தொப்பிக்குள் கோழிக்குஞ்சு வந்து சேரும் வழி

                         ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- திரையாக்கமும் , திரைக்கதையும்                                                            இசை        சமீபத்தில் இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. அதில் “ ஓநாயும் , ஆட்டுக்குட்டியும் ” புத்தகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பம்சம் உண்டு.அது “ திரையாக்கம் ” என்கிற ஒன்றயும் கூடுதலாக தாங்கி வந்திருக்கிறது. இந்த திரையாக்கம் பகுதியில் மிஷ்கினே இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்குகிறார். ஏன் இந்தக் காட்சியை வைத்தேன் ? அதை ஏன் இந்தக் கோணத்தில் வைத்தேன் ? என்பது உட்பட ஒவ்வொரு காட்சி குறித்தும் விரிவான உரையாடல்களை முன் வைக்கிறார்.   இப்படி இயக்குனரே தன் திரைக்கதையை விளக்கிச்சொல்லும் புத்தகம் தமிழில் இதுவரை வந்ததில்லையென்றும் ,  இதுவே முதல் முறையென்றும் புத்தகத்தின் முன் அட்டைக் குறிப்பு சொல்கிறது . எல்லோரையும் போல எனக்கும் மிஷ்கின் அறிமுகமானது “ அந்தக் குத்துப்பாட்டின் ” வழியேதான். அது குத்துப்பாடல்தான் ஆனால் கூடவே அதில் வேறொன்றும் இருந்தது . ” வால மீனு “ பாடலை முதன்முதலாக பார்த்