Skip to main content

Posts

Showing posts from August, 2014

அவசியம் வாசிக்க வேண்டிய மார்க்கேஸ் நேர்காணல்

       நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு          எல்லோர்க்கும் பெய்யும் மழை .                       http://knsenthil.blogspot.in/2014/08/blog-post.html                                                                                                நன்றி ; கே.என்.செந்தில்

காற்று வாங்குதல்…

காற்று வீசுகிறது அது என்னை அடித்துப் போகிறது ... காற்று வீசுகிறது அது என்னை அடித்துப் போகிறது … காற்று வீசுகிறது அது என்னை அடித்துப் போகிறது … காற்று வீசுகிறது அது என்னை அடித்துப் போகிறது … காற்று வீசுகிறது அது என்னை அடித்துப் போகிறது … இப்போது ஒரு காற்று நடந்து வருகிறது ஒரு காற்று எதிரே வருகிறது இரண்டற கலந்து காற்று வீசுகிறது .                                    நன்றி : காலச்சுவடு – ஆகஸ்ட்-2014

நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி

               நம் அறவுணர்வு ஒரு அப்புராணி நாம் வரைந்து வைத்திருப்பது போல் அதற்கு புஜபலமில்லை . நம் அறவுணர்வு ஒரு மெல்லிய பூனைக்குட் டி ஒரு துண்டுமீனின் வாசனைக்கு அது  கூப்பிடும் இடத்திற்கு வருகிறது . நாம் ஒருவரையொருவர் அடித்துத் தின்கையில் அது மாரடித்துக் கதறியது நாம் அதன் முன்னே ” வலுத்தது வாழும் “ என்கிற நியதியை முன்வைத்தோம் . ” வ ” னாவிற்கு   ” வ ” னா சரியாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது அதற்கு . நாம் ” வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கான ” வரிசையில் நிற்கையில் அது வெகுண்டெழுந்து சீரியது . நாம் அதை “ உட்கார வைத்துப் பேசினோம் “ பிறகு அதுவே தான் சும்மாடு தூக்கி வீடு வீ டாக இறக்கியது . பதினோரு மணிக்காட்சிக்குப் போவதில் நம் அறவுணர்வுக்கு சிக்கலொன்றுமில்லை . ஆனால் வெள்ளைப்பொடி கலந்து தரப்பட்ட குளிர்பானத்தைப் அருந்தி அப்பாவிப்பெண்ணொருத்தி மயங்கிச் சரிகையில் அது எழுந்து கொண்டு ” போய்விடலாம் ”… ” போய்விடலாம் ” என்று நச்சரித்தது . அப்போது அதன் காதில் நுட்பமான நீதியொன்று கிசுகிசுக்கப்பட்டது .

ஒரு புத்தகம் பத்து கேள்விகள் ( சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பை முன்வைத்து... )

                                                                      1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி என்கிற உங்கள் முதல் தொகுப்பு வாசிக்கக் கிடைக்கவில்லை. 2002ல் வெளிவந்த அந்தத் தொகுப்பிற்கும் சிவாஜிகணேசனின் முத்தங்களுக்குமான இடைவெளியில் இசை என்ற கவிஞர் அடைந்திருக்கும் பரிணாமம் என்ன? ஆமாம். அந்தப் புத்தகம் ”நமக்கு நாமே “ திட்டத்தின் கீழ் நானே போட்டுக் கொண்ட தொகுப்பு. இளங்கோ, சுகுமாரன், கல்யாண்ஜி போன்ற சிலரைத் தவிர அதிகமாக யாரும் அந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எழுதத் துவங்கும் எல்லா கவிஞனுக்குமான ஒரு இயல்பான குறுகுறுப்பின் விளைவே அந்த நூல். இன்று அதில் வாசிக்க ஒன்றுமில்லை தான். ஆனால் சிலர் ஏனோ ”இது போன்ற” தன் முதல் தொகுப்பை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்.. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது.... எல்லோரும் உமையவளின் ஞானப்பாலிற்கு ஆசை கொண்டால் எப்படி ? இந்தப் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன என்றால், நான் அடிப்படைகளைச் சொல்லுவேன்.. இலக்கியத்தின் அடிப்படைகளை.. கவிதையின் அடிப்படைகளை.. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு பெரிய மாடமாளிகைகளை எழுப்புவதாக இருந்தாலும் அத