Skip to main content

Posts

Showing posts from December, 2016

விபத்து

பதினோரு கால்களையும் ஊன்றி
இருபத்தைந்து  கைகளிலும் பற்றி
எவ்வளவோ
இழுத்துப் பிடித்தேன் அந்தச் சொல்லை
ஆனாலும், அது உன் மீது மோதி விட்டது.

சத்தம்

இந்த உலகத்தில்
தேவையற்ற சத்தங்கள்
நிறைய.
அதில்
ஆகக்கொடூரமானது
சிரிப்புச்சத்தம்.
அது எப்போதும்
சிரிக்க வக்கற்றவனின்
நடுமண்டையில் விழுகிறது.

மார்கழி- 01

நான்கு நாய்கள்
எங்கள் தெருவிற்குள்
மார்கழியை இழுத்து வந்தன.

”குக்கூ” என்காதோ கோழி !

  ஆமாம்...அவர் என் வாத்தியார். வாத்தியார் தான். குரு அல்ல. குருவெனில் அவர் ஆடைகளை துவைத்துப் போட வேண்டும். வனத்தினில் புகுந்து உள்ளதிலேயே நல்ல பழங்களாக பறித்து வந்து பசியாற்ற வேண்டும். மடிதனில் கிடத்தி உறங்க வைக்க வேண்டும். அப்போது ஒரு வண்டு நம் தொடையைத் ஆழத்துளைத்து மறுபுறமாகப் பறந்து போனாலும் , பற்களைக் கடித்துக் கொண்டு, முகத்தை முந்நூறு கோணலாக்கி அவர் நித்திரையைக் காக்க வேண்டும்.எல்லாம் செய்து விட்டு கடைசியாக கமண்டல நீரால் சாபமும் வாங்க வேண்டும். வாத்தியாரெனில் இருக்கும் இரண்டு தலையணைகளை ஆளுக்கொன்றாக வைத்துக் கொள்ளலாம். “ ஏனோ கால் வலிக்கிற மாதிரி இருக்கு... “ என்று வாத்தியார் முனகினால்  “ நல்லா தூங்கி எந்திருச்சா எல்லா சரியா போயிடும்.. பேசமா படுங்க...: என்று அதட்டி தூங்க வைத்து விடலாம். அதாவது நம் தலையணையை அவர் காலணையாக்க வேண்டிய அவசியமேதுமில்லை.     இரண்டாயிரத்தின் துவக்கத்தில்  இளஞ்சேரல், பொன்.இளவேனில், செல்வராசு, கணேசன் ஆகிய நண்பர்களுடன் நானும் சேர்ந்து “பாரதி இலக்கியப் பேரவை “ என்று ஒரு அமைப்பை உருவாக்கி எங்கள் ஊரில் இலக்கியம் வளர்த்து வந்தோம். அது வைரமுத்துவின் முறுக்கு மீசையி…

அன்புள்ள இசை

அன்புள்ள இசை,

      நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே!!).
   இத…

உலகு

இடையில் இருப்பவர்க்கு
காற்றென்றால்
அறவே ஆகாது
கடைசியில் உள்ளவருக்கு
கிளியனார் கொஞ்சலன்ன
லேசாக அலச வேண்டும்.
ஜன்னலோரத்தானுக்கோ
அது வழியே உலகமே
தெரிய வேண்டும்
ஒத்தைக்கண்ணாடி
படாத பாடு படுவதைப் பார்.