Skip to main content

Posts

Showing posts from March, 2017

நகைமொக்குள் உள்ளது ஒன்று

                         மனுஷ்யபுத்திரனின் “ தித்திக்காதே “                                        பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்               பெண்மை உடைக்கும் படை.  மாயங்கள் புரிவதில் வல்லவனான இக் கள்வனின் கொஞ்சு மொழியும், கெஞ்சு மொழியுமன்றோ  நம் பெண்மையை உடைக்கும் படை.                                                                      ( திருக்குறள் –காமத்துப்பால் ) ” சிலைகளின் காலம் , இடமும் இருப்பும் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு... ”  என்பதாக என் நூல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறேன். இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை.ஆனால் அது அடங்கி விடவும் இல்லை. மனுஷை சமீபத்தில்தான் சந்தித்தேன். இது உண்மை...  ஆனால் இந்த உண்மையைச் சொன்னால் இது ஏதோ அபாண்டமான பொய் போல தொனிக்கிறது. அவரை எனக்கு சுமார் 16 வருடங்களாகத் தெரியும் என்று மொக்கையாக ஒரு கணக்கு சொல்லலாம். ஆனால் அதுவும் பொய் போன்றே தொனிக்கிறது. உண்மையில் நான் என் பிள்ளைப்பிராயத்தில் எப்போது முதன்முதலாக மனங்கசந்து தனித்தழுதேனோ அப்போதிருந்தே எனக்கு மனுஷைத் தெரியும்.   எந்தக்காதலி என்னை மட

உய்யடா ! உய்யடா ! உய் !

                                           சுகுமாரன்- 60     ” அள்ளி கைப் பள்ளத்தில் தேக்கிய நீர் “ என்று துவங்குவதற்கு பதில் இந்தக் கட்டுரையை துவங்காமலேயே இருக்கலாம். ஒவ்வொரு கவிஞனின் தலையிலும் நாம் ஒரு கவிதையை ஒட்ட வைத்திருக்கிறோம். அப்படி சுகுமாரனின் நெற்றியில் ஒட்டப்பட்டிருக்கும் கவிதை இது.. பாவம் நாம் அதை விட்டு விடுவோம். சுகுமாரன் வேறு சில கவிதைகளையும் எழுதியுள்ளார். அதைப் பார்க்கலாம்.   நவீனக் கவிதையை ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதில்லை என்று எனக்குச் சொல்லித் தந்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரது மொழி சரளமானது.அதன் எளிய உருவிற்கும், சப்த ஒழுங்கிற்கும் ஒரு அரவணைக்கும் தன்மை இருக்கிறது. புத்தகத்திலிருந்து தலையை திருப்பிக் கொள்ளும் படி கொடுங் கசப்பூட்டும் வரிகளை அவர் எழுதியிருந்தாலும் அதன் சங்கீதம் நம் நெஞ்சில் இனிக்கவே செய்கிறது.      “ விரல்கள் மழுங்கிய தொழு நோயாளி முகந்த        ஓட்டைக் குவளை நீர் – இந்த வாழ்க்கை “ என்கிற வரியையும்,     “ நான் காளவாயிலிருந்து வெளியேறிய பெருமூச்சு ” என்கிற வரியையும் வாசிக்கும் ஒரு உயிர் க