Skip to main content

Posts

Showing posts from July, 2023

ஒரே ஒருத்தி

பு திதாக சைக்கிள் பழகும் ஒரு சின்னஞ்சிறுமி என்னைக்  கடைக் கண்ணால் நோட்டமிட்ட படியே குட்டி சைக்கிளில் ரவுண்டு வருகிறாள். ஐந்தாவது  ரவுண்டாக என் வாசலைக் கடக்கையில் பிடிப்பது போல அவள் குறுக்கே ஒடினேன் ஒருத்தி சிக்கி விட்டாள் ஒருத்தி தப்பி விட்டாள்.

அலுவலகத்தில் ஒரு பிரச்சனை

  தி டீரென சலிப்பு படரத் துவங்குகையில் கசப்பு நெஞ்சைக் கொரிக்கத் துவங்குகையில் நான் யாரையாவது "வெல்லக்கட்டி" என்று விளிப்பேன். காதல் இல்லை.. காமம் இல்லை.. கொஞ்சலும் இல்லை.. அது ஒரு அழைப்பு இன்னொருவரைக் கூட இல்லை தண்டவாளத்தில் நடக்கத் துவங்கும் என்னை திரும்ப அழைக்கும் அழைப்பது சென்ற வாரத்தில் " வெல்லக்கட்டியை" எதிர் கொண்டவள் திருமணத்திற்குக் காத்திருக்கும் ஓர் இளநங்கை. அவள் அழுது கொண்டே போய்  அவள் அப்பாவை அழைத்து வந்துவிட்டாள். அவர் ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரர். கொஞ்சம் ரத்தம் நிறைய அவமானம் அதன்பிறகு கவனமாக இருக்கிறேன். "ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ட்ரேலி"க்கு அப்பா இல்லை. அவர் ராணுவத்திலும் இல்லை.

அடுத்த சனி

  பொ றுப்புணர்வின் சக்கரங்களை உருட்டியபடி ஞாயிறு காலையில் வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் ஒருவன் மிச்ச கடலைப் பாக்கெட்டை வீதியில் எறிகிறான் அந்த வெடிகுண்டில் சிதறுகிறது நேற்று. நேற்றில் மலையுச்சி இருந்தது. மந்தமாருதம் தவழ்ந்தது பாலொளி நுரைத்து நுரைத்துப் பொங்கியது. ஆனந்தக் கூத்தில் அகிலமே ஆடியது இன்றின் நேற்றிலோ தலைவலி, குமட்டல்,  குற்றவுணர்வு, தாளமாட்டாத அருவருப்பு நேற்று கடித்துண்ட காஷ்மீரத்து ஆப்பிளில் இன்று நெளிகின்றன புழுக்கள் சுண்டுவிரலால் இழுத்துச் செல்லப்படும் நீ முஷ்டியைத் தூக்கும் காட்சி ஒரு தமாசு தம்பி...! நேற்றை அப்படிக் கசக்காதே! நேற்றை அப்படி எறியாதே! அடுத்த சனிக்கு  இன்னும் ஆறே நாள்தான்.