Skip to main content

Posts

Showing posts from March, 2011

என் முதல் சிறுகதை

இளமஞ்சள் நதி தன் பத்தொன்பதாவது வயதில் அப்பாவிடம் இருந்து முதல் அரையை வாங்கிக்கொண்டு கொஞ்சமும் பதற்றமற்று நின்று கொண்டிருந்தான் பிரபு. அப்பாவிடம்அவனுக்கு எப்போதும் பயமிருந்ததில்லை. தோளிற்கு மேல் வளர்ந்த பிறகல்லகாலிற்கு கீழ் நிற்கும் போதே தோழனாகி விட்டவன் அவன். தன் முடிவில்உறுதியாகவே இருப்பதாகவும், குடும்ப மானம் போய் விடுமென்றால் குடும்பத்திலிருந்து போய் விடுவதாகவும் சொன்னான். கூப்பாடு போட வாய்திறந்த சரஸ்வதியை “ஊரக் கூட்டதடி கழுத முண்ட” என்று காலைத் தூக்கிக்கொண்டு உதைக்கப் போனார் கணேசன். அவள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். பிரபு பீரோவைத் திறந்து தன் ஆடைகளை எடுக்கத் துவங்கினான். “தூக்கத்திலிருந்த மனைவி கழுத்தை நெறித்துக் கொலை; கணவருக்கு போலீஸ் வலை வீச்சு” ... உறக்கம் வராது உலாத்தும் எல்லா ராத்திரிகளிலும் கணேசனுக்கு இந்த செய்தி நினைவில்வரும். போலீஸ் மட்டும் வலைவீசாமல் இருக்குமானால் ஒருவேளை இந்நேரம் அது நடந்து முடிந்திருக்கலாம்.அந்தராத்திரிகளில் அவர் சிகரெட்டுகளை கொன்றுபோட்டு மிதித்தார்.கணேசனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணத்திற்கு முன்பே ஒ

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது

கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை உடைகளில் கிழிசலேதுமில்லை ஆனாலும் அந்தக் கண்கள் .. அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை அவன் உணவு தேக்கு மரக்கதவுகளாலும் சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும் இரண்டு கொழுத்த நாய்களாலும் தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள் வாழ்கிறது. அந்த வீதியில் எத்தனையோ வீடுகள் திறந்திருக்கும் போதிலும் பன்னெடுங்காலமாக அவன் அந்த இரும்பு கிராதிக்கு கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான். காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து, நாய்களை கொன்று வீசி விட்டு தேக்குமரக்கதவுகளை உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில் அவன் புனையும் பாடல்கள் அவனைப் போலவே இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன. அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான் அல்லது அந்தப் பசியை. அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது. அது வாழட்டும் காணவே காணாத அந்தப் பிச்சை அதுவும் வாழட்டும் அந்த நாய்கள் அவை வாழ்வாங்கு வாழட்டும்.