Skip to main content

Posts

Showing posts from July, 2013

பன்னிருவிழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்..

    தேங்காய்மூடி கச்சேரியின் முன்   ஒற்றை ஆளாய் அமர்ந்திருக் கிறேன்.   ஸ்ருதி சேரவில்லை...   தாளம் தட்டுகிறது....   வெள்ளி அடிக்கிறது...   என் அமர்ந்தகோலம் மாறவில்லை   ஒரு மகாவித்வான் எப்படி சொக்குவாரோ   அப்படியே தான் இவரும் சொக்குகிறார்   எங்கெங்கு சொக்க வேண்டுமோ அங்கங்கு.   அந்தப் பாடல் எழுந்து பறக்கும் இடத்தில்   சரியாக, மிகச்சரியாக     பெட்டி போடுபவரும் சேர்ந்து கொள்கிறார்   இரண்டு வெள்ளியும் சேர்ந்தடிக்கையில்   என் மடி நனைந்து விடுகிறது  கண்களை மூடிக்கொண்டு தலையை உருட்டும்  இந்த தபெலாக்காரருக்கு என்ன தெரிகிறதென்று   எனக்குத் தெரிகிறது   உள்ளதிலேயே பொடித்தேங்காய்ளாகப் பொறுக்கி   கேரிபேக்கில் போட்டு முடிச்சிடப்பட்டுக் கொண்டிருக்கும்   இந்தக் கோவிலின்   கோபுரகலசத்தின் உச்சியில்   தீடீரென, எங்கிருந்து வந்ததென்றே   தெரியாமல்   ஒரு மயில் வந்து குந்துகிறது.

இரு கவிதைகளைப்பற்றி - சாம்ராஜ்

 சமகாலத்தில் நவீன தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் சூதுகவ்வும் திரைப்படத்தின் நாயகனைப்போலவே இருக்கின்றனர் மானசீகமாக இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்துகொண்டு, அவளோடு வாழ்வதாக, காதலிப்பதாக, புணர்வதாக, பினங்குவதாக, பின்பு மரிப்பதாக பாவனை செய்கின்றனர்.      சாத்தான், கிழக்கடவுள், புணர்தல் இன்;னும் சில உடல் உறுப்புக்களை குறிக்கும் சொற்களுக்கு தமிழ்க் கவிதைகளில் தடை விதிக்கப் படுமேயானால் ஒரு பெருந்திரள் கவிஞர்கள் கவிதைப் பரப்பிலிருந்து விலகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது. நல்ல கவிதையை வாசிப்பதென்பது மதுரைப் பகுதியில் நடக்கும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் மூன்று சீட்டு விளையாட்டு போல ஆகிப்போனது. நிகழ்த்துபவர்களே எப்பொழுதும் ஜெயிக்க, மிக அரிதாகவே நாம் வெல்கிறோம். வினையத்துடன் சுருட்டப்படுகிறது. விரிக்கப்பட்ட சாக்கு இத்தனை சோதனைகளையும் தாண்டி (உண்மையாகவே அது சத்திய சோதனைதான்) பயணப்படும் பொழுது அரிதான, அசலான குரல்களை கேட்கிறோம். அப்படியான அசலான குரல்களில் ஒன்றாகவே நான் லிபி ஆரண்யாவையும், இசையையும் கருதுகிறேன்.           உள்ளே வைத்து உடைப்பவர்கள் –    லிபி ஆரண்யா பொதுவாக இடதுசாரி கவ