Skip to main content

Posts

Showing posts from January, 2018

மூன்று கவிதைகள்

                                                                                     1. காவியம்   இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?   சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்  லாரி ஏறிவிட்டது.  அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,  கல்லூரி மாணவி ஒருத்தி   எஞ்சிய காலிரண்டைப் பற்றி  அலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள். " குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு"   காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர்    “ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று       நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.                                        2.  பிறகு கடவுளே! நீர் முதலில் மனைவிகளின் கன்னங்களிலிருந்து வழுவழுப்பைச் சுரண்டி விடுகிறீர் பிறகு கணவர்களை கூண்டிலேற்றி முதுகுத் தோலை உரித்தெடுக்கிறீர் கடவுளே! நீர் முதலில் கணவர்களின் சொற்களிலிருந்து நறுமணத்தை விரட்டியடிக்கிறீர் பிறகு சத்தியம் செய்யச் சொல்லி மனைவியரைத் துன்புறுத்துகிறீர்                                    3.  ஸ்

கவிதையின் விளையாட்டு - “ பழைய யானைக்கடை” நூலின் என்னுரை

                             சங்கத்திலிருந்து   சமகாலம் வரை கவிதைக்குள் “ விளையாட்டு ”   எப்படி இயங்கி வந்திருக்கிறது என்றறிந்து   கொள்ளும் விருப்பத்தில்    விளைந்ததே இந்நூல் . மொழிக்குள் ” விளையாட்டு ” என்பது எது ? அது அங்கு எவ்விதம் தொழில்படுகிறது?   எந்த அளவில் விளையாட வேண்டும்?  என்பவை கொஞ்சம் சிக்கலான கேள்விகள். நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் ” பரிட்சார்த்தமுயற்சி ” என்கிற ஒன்றையும் சேர்த்து, நான்  “ விளையாட்டு ” என்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் “ துடுக்குத்தனமும் ” சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.  “ இரசம் ” ” மனத்துக்குத் தக்க மாறும் என் பதே அறிஞர் கூற்று. நான் விளையாட்டு என்று கொள்வது உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.    இது ஓரு முழுமையான ஆய்வுநூல் அல்ல. இப்பொருளைத் தீர ஆய்வு செய்ய வேண்டுமெனில் தமிழில் இது வரை எழுதப்பட்ட எல்லா கவிதைப் பிரதிகளையும் வாசித்திருக்க வேண்டும். அதற்கு இப்பிறவி போதாது . நீங்கள் ஒரு  “ சாம்பிள் சர்வேயை ” எவ்வளவு பொருட்படுத்துவீர்களோ அ