Skip to main content

Posts

Showing posts from November, 2014

இன்னிரவு

 உற்சாகம் தாளாத   நடனக்காரன் பாட்டுச்சத்தத்தை  கூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமென நிலவைத் திருகுகிறான் ஒருவன்.

சினிமாவில் வருவதைப் போன்றே..

சினிமாவில் வருவதைப் போன்றே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தேன். சினிமாவில் வருவதைப் போன்றே வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. சினிமாவில் வருவதைப் போன்றே எனக்கு ஒரு அழகான தாடி முளைக்குமா ? K.J. ஜேசுதாஸ்   எனக்காக பாடுவாரா ? நான் ஒரு அகல்விளக்காக காற்று வந்து என்னை அணைக்கப் பார்க்குமா ? சினிமாவில் வருவதைப் போன்றே மரணத்தின் மரத்தடியில்  எனக்கு ஞானம் பிறந்து விடுமா ? சினிமாவில் வருவதைப் போன்றே என் மனைவி கடைசியாக தன் பொட்டுத்தாலியையும் அடகுவைப்பாளா ? ” ஒரே ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன் ” என்று கேட்டு என்னுடைய ஏழு காதலிகளில்  எந்தக்காதலி  வாசலில் வந்து நிற்பாள் ?