Skip to main content

Posts

Showing posts from April, 2013

லிபி ஆரண்யாவின் “ உபரிவடைகளின் நகரம்” -மதிப்புரை

  அதிகம் புழங்காதவழியில் ஒரு திமிரான பயணம்
( லிபி ஆரண்யாவின் “ உபரிவடைகளின் நகரம் தொகுப்பை முன் வைத்து ) -இசை-
மாட்டை வெளியே மேயவிடும் முன் கயிற்றின் மறுமுனையை ஒரு தடித்த மரத்தில் கட்டிவிடுவது நமது வழக்கம். லிபி அந்தக் கயிற்றையும் அறுத்தெரிந்து விடுவதின் மூலம், கயிற்றின் நீளமே மாட்டின் சுதந்திரம் என்கிற கட்டுப்பாட்டை  மீற முயற்சித்திருக்கிறான்.இத்தொகுப்பில் வரும் கவிதைகளுக்கு ஒரு திடமான மையப்புள்ளி இல்லை.அது நிலையற்று ஒன்றைத் தொட்டு ஒன்று, அதைத் தொட்டு இன்னொன்று என்று தாவித்தாவி பறந்தபடியே இருக்கிறது. ஆனாலும் ‘ ஒன்றைத் தொட்டு ஒன்று “ என்பதால் எல்லாவற்றிற்குமிடையே மங்கலாக ஏதோ ஒன்று தொட்டுக்கொண்டு தான் இருக்கிறது. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தை துய்கும் வேட்கை என்று இதைச் சொல்ல்லாம். சில கவிதைகளில் இந்த தாவல் “ போதை வேளைப் பேச்சு “ என்கிற சாக்கில் நிகழ்கிறது. சில சமயம் நிதானத்தில் நிகழ்கிறது. ”போதை வேளைப் பேச்சு” சற்று அதிகம் தாண்டுகிறது என்பதில் வியக்க ஒன்றுமில்லை. தமிழில் இதற்கு முன் ”கூட்டுக்கவிதை” என்பதாக இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் ஒரு தனியாள் தன் தொகுப்பின் அனேக  …

எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழி

ஒரு பொட்டு தெரித்தாலே உடல் கொப்புளமாய் பொந்திப் போகையில் எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழியில் மனிதர்கள் ஏன் இப்படி நெருக்கியடித்து நிற்கிறார்கள்
ஒருவரை ஒருவர் முந்தவும் பார்க்கிறார்கள்
 நன்மார்க்கத்தின் வழியில்
 காற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.
அங்கு ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிலரும்
ஏன் இங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
தவிரவும்,  அடிக்கடி ஏன் அவர்கள் சலவாய் வடிக்கிறார்கள்.
வாணியிடம் ஆசிபெற்ற கையோடு
உற்சாகமாய் வந்து
இந்த நெரிசலில் கலக்கிறான் ஒரு கவி.
அவன் தொப்பி எதுவும் அணிந்திருக்கவில்லை
மேலும்
அனைவரையும் தொப்பியைக் கழற்றிவிடும் படியும்
கேட்டுக் கொள்கிறான்.
எட்டுமுழ வேட்டியை தலைக்கு போர்த்தியிருக்கும்
சிவனாண்டியைப் பார்கையில்
நமக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.
உளுந்துவடைகள்
எண்ணெய்க் கொதிக்கு மருளுமோ தாயே ?

எனது கவிதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு

நன்றி: யுகமாயினி சித்தன்நான்

நான்
                          எழவு வீட்டில்
                          குடித்துவிட்டு ஆடும் தப்பட்டை

வாழ்கையை நகர்த்துவது....

சாமீ, இது துள்ளவே துள்ளாதா வானத்திற்கும் பூமிக்குமாய் வேண்டாமப்பா
ஒரு தவளையைப் போலவேனும் துள்ளாதா?

ஓடாதா,
ஒரு ஓட்டை சைக்கிள் போலவேனும்?
தின்று தின்று பெருத்துவிட்டதா
கொஞ்சம் வேகமாகக் கூட நடக்காதா ?

வாழ்கையைப் பற்றி பேசுகையில்
“ நகர்கிறது “  என்று முதன்முதலாய் சொன்ன
அந்த வித்யாபதியைக்  காண விரும்புகிறேன் எனது நான்கு கவிதைத்தொகுப்புகள்,
இரு கட்டுரை தொகுதிகள்,
இரண்டு தடித்த நாவல்கள்
யாவற்றையும் உமது காலடியில் வைத்து
தெண்டனிடுகிறேன் ஐயா !

கொம்பு இதழில் வெளிவந்திருக்கும் எனது நேர்காணல்..

பேட்டி

இசை:  (1977)


இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோவை மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். 2002-ல் இருகூர் பாரதி இலக்கிய பேரவை  வெளியீடாக ' காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி' என்கிற கவிதைத் தொகுப்பும், 2009-ல்  ' உறுமீன்களற்ற நதி்' , 2011-ல் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள்” ஆகிய கவிதைத் தொகுப்புகள் காலச்சுவடு பதிப்பகம்  மூலமாகவும் வெளிவந்துள்ளன. கவிதை தவிர கவிதை பற்றிய எழுத்துகளும் உண்டு.

******************************
**********************************

எப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை?

ஒரு கலைஞன் அவனையும் அறியாமல் சதா காலமும் எழுதுவதற்கான முனைப்போடே இருக்கிறான் என்றே நினைக்கிறேன். அரவத்தி்ன் செந்நா, வெளியைத் தீண்டிக்கொண்டேயிருப்பதைப்போல் கலைஞன் இவ்வாழ்வை தீண்டிக்கொண்டே இருக்கிறான். நான் இக்கணத்தில்  இவ்வாழ்வை தீண்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவன் ப்ரக்ஞை பூர்வமாக உணரும்போது எழுதத் துவங்குகிறான். ஏதோ ஒரு சொற்றொடர் உதிக்கிறது.  பிறகு அவன் தன் கற்பனை, சொல்வளம் ஆகியவற்றை அதனுடன் இணைக்கிறான். இதுவரை தன் புத்தியில் சேகரமாகி இருக்கிற கவிதையியல் குறித்த அறிவை பயன்படுத்திக்கொண்டு அவன் த…