Skip to main content

Posts

Showing posts from April, 2014

பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்தம்

          திடும்.. திடும்.. திடும்.. திடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. திடுமு உறுமியதில் மனத்துக்கண் விழித்துக்   கொண்டது. தப்பட்டையும் பலகையும் சேர்ந்து அணைந்து கிடந்த உயிரில் வாய்வைத்து ஊதின. ஒரு நிமிடம் போதும் …. காலில் சலங்கையை ஏற்றிவிட்டு தலையில் ஒரு ஈரிலைத்துண்டை சுற்றிக்கட்ட .. ஆனாலும் அது இயலாது ஏனெனில் நான் ஒரு கனவான் ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… டுட்டூ.. ட்டு… டூ…   டுடும் ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… டுட்டூ.. ட்டு… டூ…   டுடும்.. கனவானுக்கு மறுக்கப்பட்ட களியாட்டத்தின் முன் கால்களை இறுக்கிக்கொண்டு நவண்டைக் கடித்த படி நிற்கிறேன் உதறி உதறி உள்ளேயே விழுகிறேன் அப்போது பறந்த விசி

வாழ்விலோர் ஆனந்தம்

  இப் பொழுது   எனக்கு வேறு யோசனைகள் கிடையாது..   சிந்தை முழுக்க ஒரே எண்ணம் “: ஒன்னுக்கு அவசரம்...   எங்காவது ஒரு இடம் பார்த்து பீய்ச்சியடிக்க வேண்டும் ”   மூத்திரப்பை காலியாகும் வரை   குறளிகளின் காற்சலங்கைக்கு சக்தியில்லை.   என் இனிய மூத்திரப் பிரச்சனையே....

பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்

            “ மன்னித்துக்கொள்ளுங்கள் “     என்பது போல   என் உடைந்த ரிமோட்டை   அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.   கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.   ஒரு குண்டு வெடித்தது போல   அது சிதறியிருந்தது.   இதழ்க்கடையில் புன்னகைத்த அவர்,   ” மன்னித்தோம் ”   என்பது போல    புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.     ''எப்படியென்றே தெரியவில்லை...      பீரோ மேலிருந்து     தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “     என்று சொன்னேன்.    அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.    ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து    எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.    அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை    தன் சிதைந்த உருவின் வழியே      ரகசியமாக   சொல்லி வைக்கின்றன.     மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்   என்பதை அறிந்து கொள்ள   மலைவெளிக்குள் நுழைந்து     குகை வழிக்குள் புகுந்து   ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா ?   நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்...   அவர் சொல்வார் ஆயிரம்.

பெருமாள்முருகன் கவிதைகளுடனான பயணம்

          ஏழு நாவல்கள் , நான்கு சிறுகதைத்தொகுதிகள் , ஏழு கட்டுரைத்தொகுப்புகள் , கொங்கு வட்டார சொல்லகராதி என்னும் அகராதிப் பணி , பதிப்பாசிரியர் பணி , தொகுப்பாசிரியர் பணி என இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில்    பெருமாள் முருகன் நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார் . முதல் தொகுப்பு 1992 ல் வெளிவந்த “ நிகழ் உறவு “, கடைசித் தொகுப்பு ” வெள்ளிசனிபுதன் ஞாயிறு வியாழன் செவ்வாய் ”. இடையே ” கோமுகி நதிக்கரை கூழாங்கல் ” , ” நீர் மிதக்கும் கண்கள் ” என்று இரண்டு தொகுப்புகள் உண்டு .   பாசத்தளைகளால் என்னைக் கட்டாதே / ஐம்பொறியடக்கி / நாற்காலிக்குள் அமிழ்ந்து / நாட்களை ரணமாக்கி / தேய்ந்து / விரக்தி கூன் சுமக்க என்னால் முடியாது / சு்ற்றிலும் எரிகையில் / காலுக்குள் தலைமாட்டி / சுவருக்குள் புதையும் வாழ்கை / உன்னோடு போகட்டும் போ /…. என சமூக அவலங்களுக்கெதிரான தார்மீக ஆக்ரோஷத்துடன் துவங்கும் இவரின் பயணம் ,   உறவுகளுக்கிடையேயான காதலும் சிடுக்கும் ,   இயற்கையுடனான லயிப்பு , அது அழிக்கப்படுவது குறித்தான கவலை , குழந்தை உலகத