Skip to main content

உதயகுமார் பேய்



யாரது .. ?

பேயது !

  •          
நான் 30,000 ரூபாய்
செலவு செய்து சுவரோடு ஒட்டிக் கொள்ளுமாறு
ஒரு ப்ளாஸ்மா டீவி வாங்கிவைத்தேன்.
சனியன், அது வழியாகத்தான்
ஒரு பேய் வந்து குதிக்கிறது என் வீட்டில்.
  •           
உன்னோட் சேனல் மூனு
அங்கு மட்டும் இரு.
தொன்னூறு சேனல்களுக்கும் வந்து தொலைக்காதே.
  •       
எனக்குத்தான் லீவ் கிடைக்கலியே
அதான் எழுத்தாளர் கூட்டறிக்கையில்
கையெழுத்திட்டிருக்கிறேனே ?
  •    

ஆமாம்..
நேற்று ஏ.சி பாரில்தான் பீர் குடித்தேன்.
அதுக்கு...?
  •   

அரசொருபக்கம் கண்காணிக்கிறது
பேயொருபக்கம் கண்காணிக்கிறது
  •       
என் கைச்சரசத்தில்
இடை நுழைந்து தடைசெய்ய
உனக்கு வெட்கமாக இல்லையா?
  •        
தம்பி, என்ன எழுதுகிறீர்?
கவிதை...
அரசியல் கவிதை..

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை