
சிவாஜிகணேசனின் முத்தங்கள்
D.சிவாஜி கணேசன் ஒரு வங்கியின் காசாளராக பணியாற்றி வருகிறார்.
எப்போதும் கலைந்த சிகையோடும்
அழுக்கேறிய உடைகளோடும் காணப்பட்டாலும்
இயல்பிலேயே அழகானவர் அவர்.
பூக்கள்,குழந்தைகள் மற்றும் பழைய சினிமா பாடல்களின் ரசிகர்.
சிவாஜிக்கு மூன்று சகோதரர்கள்
மூவரும் வசிப்பது இன்று முவ்வேறு திசைகளில்.
”ராஜாக்கள் மாளிகையில்
காணாத இன்பமடா”
என்கிற பாடல் வரியை எப்போதும் கேட்டாலும்
அப்போதே அழுதுவிடுபவர் அவர்.
குடிப்பதற்கு முன்
மது புட்டியை ஆழ்ந்து முத்தமிடும்
பழக்கமுள்ள அவர்,
வங்கியின் வாடிக்கையாளர்களை
முத்தமிட்ட குற்றத்திற்காக
இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்
‘இனிமேல் இதுபோல் நிகழாது’
என்கிற ஒப்புதலுடன்
இரண்டாம் முறை பணியில் சேர்ந்த தினத்தில்
‘தங்களையும் உடன் பணிபுரியும் ஊழியர்களையும்
மட்டுமாவது முத்தமிட்டுக் கொள்ளலாமா?”
என்றவர் பரிதாபமாக கேட்க
மேலாளர் தலையில் அடித்துக் கொண்டார்.
(செல்மா பிரியதர்ஸனுக்கு)
நன்றி: உயிர்மை
D.சிவாஜி கணேசன் ஒரு வங்கியின் காசாளராக பணியாற்றி வருகிறார்.
எப்போதும் கலைந்த சிகையோடும்
அழுக்கேறிய உடைகளோடும் காணப்பட்டாலும்
இயல்பிலேயே அழகானவர் அவர்.
பூக்கள்,குழந்தைகள் மற்றும் பழைய சினிமா பாடல்களின் ரசிகர்.
சிவாஜிக்கு மூன்று சகோதரர்கள்
மூவரும் வசிப்பது இன்று முவ்வேறு திசைகளில்.
”ராஜாக்கள் மாளிகையில்
காணாத இன்பமடா”
என்கிற பாடல் வரியை எப்போதும் கேட்டாலும்
அப்போதே அழுதுவிடுபவர் அவர்.
குடிப்பதற்கு முன்
மது புட்டியை ஆழ்ந்து முத்தமிடும்
பழக்கமுள்ள அவர்,
வங்கியின் வாடிக்கையாளர்களை
முத்தமிட்ட குற்றத்திற்காக
இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்
‘இனிமேல் இதுபோல் நிகழாது’
என்கிற ஒப்புதலுடன்
இரண்டாம் முறை பணியில் சேர்ந்த தினத்தில்
‘தங்களையும் உடன் பணிபுரியும் ஊழியர்களையும்
மட்டுமாவது முத்தமிட்டுக் கொள்ளலாமா?”
என்றவர் பரிதாபமாக கேட்க
மேலாளர் தலையில் அடித்துக் கொண்டார்.

(செல்மா பிரியதர்ஸனுக்கு)
நன்றி: உயிர்மை
Comments