என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது.
வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம்
சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன
அதற்குள் அவ்வளவு அவசரம்
வாழ்வைக் கண்டு பிடிக்க
இப்படிக் கிளம்புபவர்கள்
பொதுவாக திரும்பி வருவதில்லை
கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை
அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான்
எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல்
அவனுக்குத் தெரியும்
வாழ்வின் அர்த்தம்
ஆடென.
நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments