Skip to main content

மலைக்கு அப்புறம் என்ன?










என் ஊருக்குப் பின்னே  ஒரு மலை இருக்கிறது.
வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம்
சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன
அதற்குள் அவ்வளவு அவசரம் 
வாழ்வைக் கண்டு பிடிக்க 
இப்படிக்   கிளம்புபவர்கள்
பொதுவாக திரும்பி வருவதில்லை
கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை 
அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்
 எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல்
அவனுக்குத் தெரியும்
வாழ்வின் அர்த்தம் 
ஆடென.

               நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

Comments

Anbu said…
This comment has been removed by a blog administrator.
யோசிக்க யோசிக்க பல கோணங்களில் பல அர்த்தம் தருகின்ற கவிதை. நீர் சத்தியமாக மிஸ்டிக் கவிஞரே! மிஸ்டேக் கவிஞர் அல்ல.
வாழ்வின் அர்த்தம் ஆடென. போய்ப் பொழப்பப் பாருங்கடா... புள்ள குட்டியப் படிக்க வைங்கடா... என்ற தேவர் மகன் இளைமாக்ஸ் வசனம் ஞாபகம் வருகிறது.
வண்ணைசிவா said…
வாழ்வை அதன் போக்கில் விடுவதே நல்லது என்பதை சொல்லும் இக்கவிதை அருமை.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...