எழுபது கடல் எழுபது மலை
எழுபது கடல் எழுபது மலை தாண்டி
எங்கோ இருக்கிறது
நான் தழுவ வேண்டிய உடல்
கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன
மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது
முதல் கடலின் பாதியில் நிற்கிறது
எரிபொருள் தீர்ந்த படகு
நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன்
தாகமாய் தவிக்கிறது எனக்கு
இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே
எனக்கு ஒருவாய் நீரில்லை
இன்னும் 69 1/2 கடல்களும்
எழுபது மலைகளும் மீதமிருக்க
துளியும் எள்ளலின்றி
குரல் தழுதழுக்கச் சொல்கிறேன்
“யாம் ஷகிலாவின்
பாத கமலங்களை வணங்குகிறோம்”
- நன்றி: உயிர் எழுத்து
Comments
:-))))))))
சுத்தமான ஆணாதிக்க பார்வை உனக்கான உடல் இல்லை என்றால் ஷகிலாவை தேர்ந்தெடுப்பாயா..
உன் தோழி இப்படி தேர்ந்தெடுத்தால் உனக்கு சம்மதமா..இல்லை தோழி நீங்கள் ஷகிலாவை வைக்கும் இடத்தில் உங்களை வைத்திருந்தால் சம்மதமா..
இதை ஒரு பெண் எழுதியிருந்தால் பிடித்து கொதறி இருப்பீர்கள் நீங்கள் ஆண் எதுவேண்டுமானலும் எழுதலாம் அதற்கு பின்முன் இடை நவீனத்துவ விளக்கம் வேறு தரலாம் இதெல்லாம் காலகொடுமை