ஒரு செய்தியும் இல்லாதவன்
செயற்கரிய செய்யாதவன்
வெற்றிகளின் கழுத்து ரத்தம் காணாதவன்
பொந்தில் கிடக்க வேண்டும்
ஆனால்
அவன் ஒரு செயல்வீரனை அழைத்து விட்டான்
“என்ன விசேஷம் ...? "
என்கிற கம்பீரத்திற்கு
என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை
“ சும்மா...ஒரு ப்ரியம்... ” என்ற சொல்லலாம்
ஆனால்,
ப்ரியம் விசேஷத்தில் சேருமா என்பது சந்தேகம்தான்.
Comments