எனக்கு காலையிலும்  மாலையிலும் தன்னையே பிழிந்து  சூஸ் போட்டு  கொடுக்கும் ஒரு அம்மா.. வட்டவட்ட சிப்ஸ் துண்டுகளாக  தன் சதை  அரிந்து தரும் ஒரு அப்பா.. இரண்டு  இரத்தத்தின்  இரத்தங்கள்.. என்றாலும் அவர்களின் வயிற்றுக் கடுப்பின் போது நான் கழிவறைக்கு உடன் போவதில்லை. என் மழைக்காலத்து ஆஸ்துமா இரவுகளில் அவர்கள்  குறட்டை விட்டு  தூங்குகிறார்கள்  " அங்க இருக்க முடியல.. வீட்டுக்குள் புகுந்து  பெட்டைகள சிதைக்கிறாங்க.."  என்று அகதியொருத்தி  பேட்டி தருகையில்  நான் பாயசம்  அருந்திக்  கொண்டிருந்தேன்  விழிக்கடை நீரை உதறி எறிந்து விட்டு  மீதி பாயசத்தை உண்டேன்   நண்பனை சிமெண்னெய் ஊற்றி எரித்து விட்டு வந்த இரவு  கால முறைப்படி  மனைவியை புணர்ந்தாக வேண்டிய நாளாக இருக்கிறது  "தம்பி.... !  எழந்திரு...."  நாமுக்குள் எட்டிப்  பார்த்தால் நானும், நீயும்  தனித்தனியாக  தெரிகிறது.  இந்த "ஓருடல் ஈருயிரை ' சுடுவதென்றால் எத்தனை முறை சுட வேண்டும் குத்துவதென்றால் எத்தனை முறை குத்தவேண்டும்..