நீ எங்கு தான் இருக்கிறாய்   வாணிஸ்ரீ?   உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ?   இந்த மழைக்காலத்தில்   எல்லா பேருந்து நிறுத்தத்திலும் ஆள் நிறுத்தியிருக்கிறேன்.   சன்னலோரம் அமர்ந்து   நீர்த்துளிகளைப் பிடித்து விளையாடியவாறு   நீ வந்துவிடுவாயென..     எல்லோரும் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்குகிறார்கள்.   குருட்டுப்பிச்சைக்காரனுக்கு   சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி..   நான் ஓடிப்போய்   நீ வாணிஸ்ரீ தானே என்று கேட்டேன்.   அவளும் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போகிறாள்.   நீ வந்து அழகானதொரு கிண்ணத்தில்                     செக்கச்சிவந்த உன்உதிரம் நிரப்பித் தரவில்லையென்று தானே   இப்படி   கள் மேல் காதல் கொண்டு திரிகிறேன்.    எங்கு தான் இருக்கிறாய்   வாணிஸ்ரீ?   வந்துகொண்டிருக்கிறாயா  அல்லது  இல்லவே இல்லையா ?