இன்று  அதிகாலையில்  சுந்தரமூர்த்தியை   திடீரென  மகிழ்ச்சி  பிடித்துக்  கொண்டது .   வீட்டிலிருந்து  பணிமனைக்கு    காற்றுவெளியினில்  பயணம்  போகிறார் .   கியரையும் , ப்ரேக்கையும்  கடவுள்  கவனித்துக்  கொண்டார் .   வானம்  “ மெல்ல  தூறவா  ? “ என்று  கேட்டது .   அவர்  “ இம் ” கொட்ட  , அப்படியே  ஆனது .   “ ராஜா  “ அவர்  நாவில்  வந்தமர்ந்தார் .   தோளினை ச்  சுற்றிக்கட்டிய  அவ்வளைக்கரம்    ஒரு  நட்சத்திர நடிகையுடையது .   சந்தோஷமென்றால்  சந்தோஷம்   அவ்வளவு  சந்தோஷம் …   அலுவலகம்   தாண்டியும்  போகிறார் .   வே றெ ங்கோ  போகிறார் .   அவர்  சந்தோஷமாக  இருப்பது  அவருக்கே  தெரியவில்லை .   ஆகவே  அவ்வாறிருந்தார் .   மற்றபடி , அதற்கொரு  காரணம்  கேட்டால்  அவரெங்கு  போவார்  எம்மானே  ?                                                             நன்றி : கொம்பு மூன்றாவது இதழ்