சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் அழைப்பை ஏற்று “ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2019 “ ல் கலந்து கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவில் இம்முறை தமிழ் மொழியின் சார்பாக நானும், மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியும் கலந்து கொண்டோம். நவம்பர் 9, 10 இரண்டு நாட்கள் நடக்க இருந்த நிகழ்வுகளுக்காக நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தேன். விழாவிற்கான அழைப்பு வந்ததும்தான் உறைத்தது என்னிடம் பாஸ்போர்ட் ஏதும் இல்லையென்பது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தாண்டி நமக்கு வேறெங்கே சோலி வந்துவிடப்போகிறது என்கிற நினைப்பில் பாஸ்போர்ட் குறித்தெல்லாம் யோசித்திருக்கவில்லை. சேலம், மதுரை அதிகபட்சம் சென்னையைத் தாண்டி இலக்கிய சேவையாற்றத் தேவையிருக்காது என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன். நான் ஒரு அரசு ஊழியன் என்பதால் “ no objection certificate” என்கிற “ NOC” க்கும் அலைய வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள் தற்போது எளிமையாக்கப் பட்டுவிட்டதாக நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். அது ...