Skip to main content

விகடகவி மட்டையை உயர்த்துகிறார்



முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது
வானத்தில் போன பறவைகள் அப்படியே நின்றுவிட்டன.
கடலில் எழும்பிய அலைகள் அந்தரத்தில் ஸ்தம்பித்துவிட்டன
அசையும் பொருளெல்லால் ஒரு நாழிகை
அப்படியே நின்றுவிட்டன
இரண்டாவது முறையாக செருப்படி வாங்கியபோது
பறவைகள் அது பாட்டுக்கு பறந்தன
அலைகள் அது பாட்டுக்கு அடித்தன
செருப்படி வாங்குவதற்காக படைக்கப் பட்டவர்கள்
கடவுளின் தரவரிசைப் புத்தகத்தில் கடைசியில் இருக்கிறார்கள்
செருப்படி வாங்கிக்கொண்டு கவிதை எழுதுபர்கள்
அதற்கும் கொஞ்சூண்டு மேலா
அல்லது
கடைசிக்கும் கடைசியா
என்றெனக்குத் தெரியவில்லை
எல்லோரும் என்னை ஒரு விகடகவி என்பதால்
நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கி காட்ட வேண்டி உள்ளது.
எனவே 100 வது செருப்படியின் போது
இந்த உலத்திற்கு முன்னால்
நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன்
ஆனால் 101 வது செருப்படி
ரொம்பவும் வலுவாக நடு மொகரையில் விழுந்தது.
நான் ஒரு விகடகவியாதலால்
வாயை இளிப்பிற்கு கொண்டு வர முயன்றேன்
அதற்குள்
கண்ணிரண்டும் கலங்கி விட்டன

Comments

அருமைடா நண்பா..
Unknown said…
சூப்பர் ..
Unknown said…
சூப்பர் ..
Unknown said…
சூப்பர் ..