
என் வீட்டுக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது.
ஆறு வயதில் விரல் சூப்பூம் பழக்கத்தை
இந்த மலை மீது தான் ஏற்றி விட்டேன்
.
அன்னைக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்களையும்
ஒரு நள்ளிரவில் இந்த மலைக்கு அனுப்பினேன்
கிரிக்கெட் மட்டை, கை மைக், கீ- போர்டு
எல்லாவற்றையும் இந்த மலைதான் வாங்கிக் கொண்டது
ஒரு காதல் மட்டும் இந்த மலை மீது
ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது வெகுகாலமாக.
நேற்றது உச்சிக்கு சென்று மறைந்ததை பார்த்தேன் .
Comments
மீண்டும் உடுக்கையடித்தால் வரக்கூடும்.
ஒருவேளை சென்று தொலைந்ததாக இல்லாமல்
விட்டெரிந்ததாக இருப்பின் கவனமாக இருங்கள் இசை.
அடர்வான கவிதை, பாராட்டுக்கள்.
-இயற்கைசிவம் www.veyilnathi.blogspot.com