ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணை கசிக்கிக் கொண்டுஎன் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம்
ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு.
“ போய்த்தொலை சனியனே..
கண்ணெதிரே இருக்காதே..”
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்.
அது தெருமுக்கில் நின்றுகொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓடோடிப் போய் கட்டிக்கொண்டேன்.
Comments
கவிதைக் குழந்தை வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது .