Skip to main content

Posts

Showing posts from December, 2012

இன்னொருவன் சொல்கிறான்...

அதிகாலை நடை உடம்புக்கு நல்லது. அது கொழுப்பை குறைத்து இதய நோய்கள் நம்மை அண்டாமல் காக்கிறது. சர்க்கரை அளவை பராமரிக்கிறது. இளங்காற்றை சுவாசிக்கத் தருகிறது. கரும்பச்சை மரங்கள் காண அழகு. புள்ளொலி கேட்டு புதுமலர் பார்க்கலாம் தூணிலும் துரும்பிலும் இருக்கிறாரோ என்னவோ கடவுள் மிருதங்கத்தில் இருக்கவே செய்கிறார். அள்ளி முடியாத வனிதையர் கோலம் அது திருக்கோலம். இன்னொருவன் சொல்கிறான்.... "அதிகாலையிலேயே வீட்டை விட்டு ஓடிப்போவதற்குத் தான் வாக்கிங் போவதென்று பெயர்".

மூதேவி அருளியவை

                                         மூதேவியால் அருளப்பட்ட எல்லா சொற்களுக்கும்     சரஸ்வதியின் பூரண நல்லாசியுண்டு.                                               இசை  : 0:00                 உண்மையில் எனக்கு முன்னுரையில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை.என் கவிதையை திறந்து கொள்ள திறவுகோல் ஒன்றை வாசகர்களுக்கு வழங்கலாம்.ஆனால் அது வலிய ராட்சதர்கள் காவல் புரியும் அதீத மர்மங்களால் மூடிய குகையல்ல. எனவே அது அவசியமற்றது.இக்கவிதைகள் எழுதப்பட்ட சூழலைப் பற்றிப் பேசலாம். கவிதைகளையும் எழுதி விட்டு பிறகு அதைப் பற்றியும் எழுதுவது அலுப்பாக இருக்கிறது.இக்கட்டுரையின் தலைப்பொன்றே போதும் என்று தோன்றுகிறது.அது கூட கொஞ்சம் அதிகமாகத் தான் பேசி விட்டது என்று தோன்றுகிறது. ”கவிதை என்பது “ என்று துவங்கி எதாவது சொல்லலாம். உங்களுக்கு போர் அடிக்கும். நீங்கள் தான் எத்தனை ”கவிதை என்பது” வை கேட்டு விட்டீர்கள்.எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்ல ஏதேனும் மிச்சமிருப்பது தான் கவிதையின் அழகா?           தாடி மண்டிய லும்பனாகவோ, மீசை வழித்த சீலனாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு தவறு என்று ஒரு