Thursday, February 6, 2014

தேன்மொழிகளின் ஸ்கூட்டிகள்




இருளிலும் மஞ்சளொளி வீசும் அழகு அவள்.
ஆனால் காதலிக்கவெல்லாம் இல்லை.
அப்பா கண்டுபிடித்து தந்தவன்
இரண்டாம் நாளில் தீடீரென புகைபிடித்தான்.
ஒரு வாரம் கழித்து மதுநெடி கொண்டு வந்தான்.
மறுநாளே மது கொண்டு வந்தான்.
வானத்தை நோக்கி உளறத்தொடங்கியவனின்
மாத்திரை அட்டைகள்   
ரகசிய இடத்திலிருந்து
டேபிளுக்கு வந்தன.
அவன் தேன்மொழியின் தலையை இழுத்துக்கொண்டு போய்
சுவற்றில் மோத விட்டான்.
ஒரு நாளில் தன்னையே தூக்கி கிணற்றுள் எறிந்தான்.
சரியாக அவனுக்கு முப்பது முடியும் காலத்தில்
கடவுள்
ஸ்கூட்டிகளை சந்தையில் இறக்கி விட்டார்.
அவள் ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கொண்டாள்.
அது இல்லாத இடத்திலிருந்து இருக்கும் இடமெங்கும்
அவளைக் கூட்டிப்போனது.
அவள் ஈரத்தலையுடன்
கண்ணாடி முன்னே நடனமாடத் துவங்கினாள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படீங்க இப்படி...!

sambu said...

Isai..................good.