ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனின் இனிய முத்தம் ______________________________ ___________ இசையின் நான்காவது கவிதைத் தொகுப்பு அந்தக் காலம் மலயேறிப்போனது’. பன்னிரெண்டு வருட கால கட்டத்தில் சராசரியாக மூன்று வருடத்திற்கு ஒரு தொகுப்பு என்ற கணக்கு. நான்கு தொகுப்புகளின் கவிதைத் தரத்தை சேர்த்துப் பார்த்தால் இது ஒரு சாதனையான நிகழ்வு, என்று தைரியமாகச் சொல்ல்லாம். (சுகுமாரன் சொல்வது போல்) எப்போதுமே கவிதையாட்டத்தில் அ ... பாயகரமான ஆனால் வீரேந்திர ஷேவாக் போல தன் இயல்பான,ஆட்டத்தை வெளிப்படுத்தும் இசை, நான்கு இன்னிங்ஸிலும் தொடர்ந்து நல்ல ஸ்கோரை எட்டுவது என்பது ஆச்சரியமான விஷயம்தான். தவிரவும் இசை, சுடலையப்பனான, எங்க பாஷையில் சரியான சொள்ள மாடனான கிரிஷ் கெயிலுக்குப் பந்து வீசவும் செய்யும் ஆல் ரவுண்டர். இந்த ஒப்புமை இத்தொகுப்பின் அவரது கவிதையிலிருந்தே உருவானது. அந்தக் கவிதை. .க்ரிஷ் கெயிலுக்குப் பந்து வீசுதல், நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை/ சொல்லப்போனால் ஒருபார்வையாளனாகக் கூட இல்லை/ மைதானத்திற்குள் தரதரவென இழுத்து வரப்பட்டு/பந்து வீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்/எதிரே கிரிஷ்கெயில் நின்று கொண்டிருக்கிறார்/அணித்தல...