Skip to main content

Posts

Showing posts from September, 2014

பிசகு

                     அப்பா தியாகி   அம்மா சாமீ   கணவனும் மனைவியும் உடனொருபாகம்   தங்கை நறுமணத்தி   அண்ணன் துப்பாக்கி குண்டிற்கு குறுக்கே விழுபவன்   குழந்தைகள் தெய்வப் பிரஸாதம்   தாத்தா உழைப்பால் உயர்ந்த உத்தமர்   பாட்டி உத்தமரின் உறுதுணை   மாமா மாமருந்து   சித்தி குளிர்தரு   ஆனாலும்   வீட்டை நெருங்குகையில் மூக்கைப் பிடித்துக் கொள்ளவேண்டும்.  அங்கு ஏதேனும் ஒன்று அழுகி   எப்போதும் ஒரு கெட்ட நாற்றம் வீசுகிறது.

நூல் வெளியீடு - கவிஞர் கலாப்ரியா உரை

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனின் இனிய முத்தம் ______________________________ ___________ இசையின் நான்காவது கவிதைத் தொகுப்பு அந்தக் காலம் மலயேறிப்போனது’. பன்னிரெண்டு வருட கால கட்டத்தில் சராசரியாக மூன்று வருடத்திற்கு ஒரு தொகுப்பு என்ற கணக்கு. நான்கு தொகுப்புகளின் கவிதைத் தரத்தை சேர்த்துப் பார்த்தால் இது ஒரு சாதனையான நிகழ்வு, என்று தைரியமாகச் சொல்ல்லாம். (சுகுமாரன் சொல்வது போல்) எப்போதுமே கவிதையாட்டத்தில் அ ... பாயகரமான ஆனால் வீரேந்திர ஷேவாக் போல தன் இயல்பான,ஆட்டத்தை வெளிப்படுத்தும் இசை, நான்கு இன்னிங்ஸிலும் தொடர்ந்து நல்ல ஸ்கோரை எட்டுவது என்பது ஆச்சரியமான விஷயம்தான். தவிரவும் இசை, சுடலையப்பனான, எங்க பாஷையில் சரியான சொள்ள மாடனான கிரிஷ் கெயிலுக்குப் பந்து வீசவும் செய்யும் ஆல் ரவுண்டர். இந்த ஒப்புமை இத்தொகுப்பின் அவரது கவிதையிலிருந்தே உருவானது. அந்தக் கவிதை. .க்ரிஷ் கெயிலுக்குப் பந்து வீசுதல், நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை/ சொல்லப்போனால் ஒருபார்வையாளனாகக் கூட இல்லை/ மைதானத்திற்குள் தரதரவென இழுத்து வரப்பட்டு/பந்து வீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்/எதிரே கிரிஷ்கெயில் நின்று கொண்டிருக்கிறார்/அணித்தல