இது என்னுடைய கட்டுரை . எனவே இவை என்னுடைய சந்தேகங்களும் , குழப்பங்களுமாகும் . இதே குழப்பமும் சந்தேகமும் கொண்ட ஒரு வாசகன் இயல்பாக இக்கட்டுரையுடன் இணைந்து கொள்கிறான் . நம் கிறுக்கு தெளிய மேற்கொள்ளப்படும் இச்செயலின் முடிவில் நம் தலை மேலும் வீங்கிவிடவும் வாய்ப்புண்டு . ஏனெனில், இப்பயணத்தின் “ வழிகாட்டும் பலகைகள் “ அவ்வளவு நேர்மையானவையாக இல்லை . இதன் திசைகள் எப்போதும் சுழற்சியில் இருக்கின்றன . இப்போது நாம் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வேண்டும் . எனவே ” மேற்கு ” என்று குறிக்கப்பட்டிருக்கிற பாதையின் வழியே தந்திரமாக நமது பயணத்தை துவங்கலாம் . கலை தன் ” சோதிப்ரகாசத்தை ” நமக்கு காட்டி மறைக்கிறது . மானுட வாழ்வின் பொற்கணம் ஒன்றை ஏந்தி நம் உயிர் தளும்பி வழிகிறது . கடவுளைக் காண கடுந்தவம் புரியும் ஒருவன் கண்ட மாத்திரத்தில் கண்களை மூடிக்கொள்கிறான் . அப்படி கண்களை மூடிக்கொள்ள செய்வதன் பெ...