Thursday, April 16, 2015

குறையொன்றுமில்லை




குறையொன்றுமில்லையை
நேற்றுதான்  நன்றாக  கவனித்தேன்
அதனுள்ளே ஒரு குட்டிக்குறை தெரிகிறது
                          அல்லது
பெரியகுறையொன்று 
குட்டிக்குறையின் பாவனையில் ஒளிந்திருக்கிறது.  
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை   என்றுதான்    சொல்கிறது
பிறகேன்
இப்படி தேம்புகிறது.

1 comment:

Rk Km said...

ஆழ் மனதெப்போதும்
அழுத்தங்களாலயே
நிரப்பப் படுகிறது.