ஒரு தேசத்தில் 4 அழகிகளும் நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர். அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர். இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான் 4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால் அங்கு பூசல்கள் மூண்டன. கலவரங்கள் வெடித்தன. முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர். வீதிகளில் பிணங்கள் கிடந்தன வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன. அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது. “ ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன் கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன் எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை.. ” முன்வரலாறு சொன்னார் குலகுரு. உடனே யாககுண்டத்தில் தீ வளர்த்து கண்ணீர் வார்த்து ரிஷியை வரவழைத்தனர். செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும் அவருக்கு கண் கலங்கி விட்டது. மனம் இரங்கி விட்டது. 32000 : 32000 என்று அழகின் சமன்குலைவை நீக்கியருளினார். தேசத்தில் அமைதி திரும்பியது. ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர். விழாக்காலங்களில் வாழ்த...