சுகுமாரன்- 60 ” அள்ளி கைப் பள்ளத்தில் தேக்கிய நீர் “ என்று துவங்குவதற்கு பதில் இந்தக் கட்டுரையை துவங்காமலேயே இருக்கலாம். ஒவ்வொரு கவிஞனின் தலையிலும் நாம் ஒரு கவிதையை ஒட்ட வைத்திருக்கிறோம். அப்படி சுகுமாரனின் நெற்றியில் ஒட்டப்பட்டிருக்கும் கவிதை இது.. பாவம் நாம் அதை விட்டு விடுவோம். சுகுமாரன் வேறு சில கவிதைகளையும் எழுதியுள்ளார். அதைப் பார்க்கலாம். நவீனக் கவிதையை ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதில்லை என்று எனக்குச் சொல்லித் தந்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரது மொழி சரளமானது.அதன் எளிய உருவிற்கும், சப்த ஒழுங்கிற்கும் ஒரு அரவணைக்கும் தன்மை இருக்கிறது. புத்தகத்திலிருந்து தலையை திருப்பிக் கொள்ளும் படி கொடுங் கசப்பூட்டும் வரிகளை அவர் எழுதியிருந்தாலும் அதன் சங்கீதம் நம் நெஞ்சில் இனிக்கவே செய்கிறது. “ விரல்கள் மழுங்...