1. காவியம்             இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?     சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்    லாரி ஏறிவிட்டது.    அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,    கல்லூரி மாணவி ஒருத்தி     எஞ்சிய காலிரண்டைப் பற்றி    அலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள்.   " குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு"     காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர்          “ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று            நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.                                         ...