உருப்படியான காரியம் எதையும்
செய்யத் துணிந்த உடனே
என்னைச் சூழ்ந்து கொள்கிறது
கொசுக் கூட்டம்
போர்ன் சைட்களில் திரியும் போதோ
வீண் அரட்டைகளில் திளைக்கும் போதோ
அவை அப்படி மொணமொணப்பதில்லை
உருப்படியான காரியமொன்றை
செய்யத் துவங்கிய மறுகணத்தில்
எங்கிருந்து கிளம்பி வருகின்றன
இத்தனை படைகள்?
ஜன்னல்களைச் சாத்தி
மின்விசிறியை வேகமாக்கி
கொசுவிரட்டிகளை ஓட விட்டு
மிச்ச மீதிகளை மின்சார மட்டையால்
கொன்றொழித்துத் தீர்த்த பிறகு
நானே ஆயிரம் கொசுக்களாகி
என்னையே குதறிக் கொள்வேன்
எனக்கும் உருப்படியான காரியத்திற்குமான உறவை
இவ்வளவு விந்தையான விதத்தில்
ஏன் வடித்தீர் ஆண்டவரே?
- Get link
- X
- Other Apps
Comments