இணையம் கணினிக்குள் புகுந்து உலகை கோலோச்சியதற்கு முந்தைய பருவம் ... அவன் இளமை “ டும்” என்ற சத்தத்துடன் வெடித்துத் திறந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. காமத்தின் கடுவளிக்கு எதிர்நிற்க மாட்டாது தள்ளாடிக் கொண்டிருந்தான். அவன் தினவிற்கு கையளவிளல்ல, கவளங்களில் வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் பட்டினியால் வாடிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சொந்த வீடில்லை. நிரந்தர வேலையில்லை. எந்த வங்கியிலும் கணக்கில்லை. ஆனால் அவன் உடல் இதை எதையும் பொருட்படுத்தவில்லை. எதிர்காலம் குறித்த பயங்கரமான கற்பனைகளிலிருந்து அவனைத் தடுத்தாட்கொண்டனர் சிலர். அவர்கள் முந்தானையைச் சரிய விடும் வேளையில் அவனுக்குக் கவலைகள் என்று இந்த உலகத்தில் ஒன்றுமே இருக்கவில்லை.ஏனெனில் இப்படி ஒரு உலகமே அக்கணங்களில் இருக்கவில்லை. பரவசத்தின் புதிர்நிரம்பிய பழ...