பாடகனற்ற   பாடகனுக்கு         " பாடகன் " என்கிற இரும்புக் குண்டால்         மூச்சிரைப்பதில்லை.          சபையில்லை  ;  செவிகளுமில்லை.          பாடுதலே  கரகோஷம் என்பதால்          எதற்கும் ஏங்கி அழிய வேண்டியதில்லை.          தன்னைத் தானே அணைத்துக் கொள்ளும் ஜாலத்தில் தேர்ந்த பிறகு          அச்சமில்லை ; அழுகையுமில்லை.           பாடகனற்ற பாடகனின் பாத்ரூமில்          ஒரு நெளிந்து வளைந்த சில்வர் பக்கெட் ...          ஆயினும், அதனுள்ளே செழுமலைச் சுனைநீர்.        அவன்  ஹெல்மெட்டுக்குள் தால் அன்றி வேறு ஒன்றுமேயில்லை.