தினந்தவறாது
ஒவ்வொரு அதிகாலையிலும்
உளுந்து வடைகளுக்கெதிராய்
பெரிய மைதானத்தில்
ஐந்து வட்டங்கள் ஓடுபவர்
தன் மருத்துவப் பரிசோதனை முடிவை
வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இருதயவால்வு ஒரு தனி உறுப்பு
அதற்குக் காதுகளில்லை
இதயமுமில்லை.
அதன் முன்னே
நீதியின் மணிநாவை ஆட்ட இயலாது.
மண்டியிடவும் ஏலாது.
Comments