டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன்.
ஜன்னலோரத்து
வயல் கொக்குகள் சட்டெனப் பறந்து விட்டன.
மூன்று நாட்களின் முந்தைய
தாடிக்குத் திரிகிறது முகம்.
தூக்கித் தூர எறிந்தவை
நமட்டுச் சிரிப்புடன் எழுந்து வருகின்றன
டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன்
திரும்பவும் நெக்குவிட்ட உள்ளாடைகளுக்கு மாறுகிறேன்
அதே நிலவின் பழைய கிரணங்கள்
களிகூர்ந்து கட்டியணைக்க வந்த நண்பன்
மனைவியின் வாயிற்குள் சென்று மறைகிறான்.
டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன்.
பியர் பாட்டிலின்
பீறிட்டடிக்கும் ஊற்று உள்வாங்கி சீலிட்டுக் கொள்கிறது.
தானே தன் கல்லறைக் கல்லை
அடித்து மூடுகிறான் ஒருவன்.
Comments