
1. குப்பை வண்டிக்கு ஒரே ஒரு சோகம்தான். குப்பை ஏதும் இல்லாத போதும் அதைக் குப்பை வண்டி என்றே அழைப்பதுதான். 2. சமயங்களில் இரண்டு குப்பைகள் தமக்குள் பேசிக்கொள்ளத் துவங்கும். அப்போது நீ அங்கிருந்து ஓடி விட வேண்டும் 3. குப்பை வண்டியில் கிடக்கும் வாடிய ரோஜா நேற்று ஒரு நறிய கூந்தலில் வீற்றிருந்தது. அதன் மீது ஒரு கவிதை கூட புனையப்பட்டிருந்தது. 4. குப்பை வண்டி ஒரு தேவாலயம் அதன் முன் மண்டியிடு! 5. முதன்முதலில் குப்பை வண்டியைத் தொட்ட போது என்னுள் இருக்கும் எதையோ தொட்டேன். அவ்வளவு மிருது அது. 6. குப்பை வண்டியை வண்டியாக்கி விட்டால் பிறகு ஒரு சிறுவனைப் போல அதை உருட்டி உருட்டி விளையாடலாம். |
Comments