நடக்கவிருந்த பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய ஒருவன் காலூன்றி மனம் வீங்கி மயிர்கூசக் கூவுகிறான்... "தெய்வமே...! " நடக்கவே நடக்காதென்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று திடீரென நடந்துவிட்ட பொழுதில் கவலையின் படுகுழியிலிருந்து பரவசத்தின் அந்தரத்திற்குத் துள்ளும் ஒருத்தி தலைமீது கைகூப்பி ஏத்துகிறாள்.. "தெய்வமே...! ஒன்றுமே நடவாத போது உள்ளதொரு தெய்வம் நான் அதன் பக்தன். |
Comments