வெகுகாலம் கழித்து தெருக்குழாயடி போனேன். பக்கத்துத்தெரு பாட்டி ஒருத்தி எனக்கு முன்னே நின்று கொண்டிருந்தாள். நிறைந்த குடத்தை குனிந்து எடுக்கையில் "புடிச்சுக்க கண்ணு..." என்று சொல்லிவிட்டுப் போனாள். கடலாகி கருமேகமென ஆகி மழையாகி நதியாகி அணையாகி உருண்டு திரண்ட பெரீய சேமிப்புத் தொட்டியாகி பேரூராட்சியின் நீர் விநியோகியுமாகி "புடுச்சுக்க கண்ணு..." என்று சொல்லிவிட்டுப் போனாள். |
Comments