Skip to main content

மானிடர்


வசரத்தில் இருக்கும் இளம் பெண்

ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே

மாகாளியம்மனின் வாசலில் 

காலூன்றிப்  பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள்.


ஒரு அவசரமுமின்றி

ஆடி அசைந்து 

வெளிவரும்  ஒரு மூதாட்டி

தன் கைக்குழியை ஒற்றி எடுத்து 

பூசி விடுகிறாள் 

அவளுக்கு.


பிசிறை 

கண் மறைத்து

ஊதியும் விட்டாள்


அந்த ஊதலில் வந்த இசை

தூரத்தில் இருந்த 

ஒருவனுக்குத்  தெளிவாகக் கேட்டது.


யாரோ யாருக்கோ

தீற்றி விடும் திருநீரில்

யாரோ ஒருவனின் 

ஏதோ ஒன்று குணமடைகிறது


தன் கை ஒன்றுமில்லாத

இந்தக் காரியத்தைக்  காணும் தேவியின் வதனத்தில்

ஒரு பூரித்த புன்னகை.


Comments