உச்சியில் பறந்து கொண்டிருக்கிறது பறவை முழுக்க அண்ணாந்தால் மட்டுமே காணமுடிகிற உச்சியில் முழுக்க அண்ணாந்துகையில் கிடைமட்டம் மாயமாகிறது அதன் அத்தனை அத்தனைகளோடும் அணைந்தும் அணையாத அந்தி வெளிச்சத்தில் வானத்திற்கு கீழே பறந்து கொண்டிருக்கிறது பறவை வானத்திற்கு கீழே மிதந்து கொண்டிருக்கிறது பறவை வானத்திற்கு கீழே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது பறவை வானத்துடன் விளையாடத் துவங்கிவிட்டது அந்தப் பறவை. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments