Skip to main content

Posts

Showing posts from September, 2025

வேறொரு கதை

அ ரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க விறைசெறி குழலி ஓங்க மெளலி ஏறியது இராமனின் முடியில் வீசிக் கொண்டிருந்த கவரியில் ஒன்று  மெல்ல மெல்ல ஓய்ந்து அசையாது நின்றுவிட்டது போற்றி கோஷங்களும் கொண்டாட்டக் கூச்சல்களும் ஆரவாரித்து ஓய்ந்த பொழுதில் தனித்து அதிர்ந்ததொரு உறுமல் சாமரதாரி ஒருவனின் பிளந்த வாயிலிருந்து காற்றின் கடு ஊளை அப்போது  அவையை நடுநடுக்கி உலுக்கியது ஒருத்தியின் கூப்பாடு “ அய்யோ….! “ “ அய்யய்யோ…!” புவியெலாம் புரக்கும் கொற்றவன் அந்த 'அய்யோ ' வின் காலில் சரிந்து விழுகிறான் பட்டுத் தெறித்து தூரப் பறந்து பொங்கு கடலில் வீழ்கிறது அவன் மணிமுடி கடல், அதைத் தன் இருண்ட ஆழங்களுக்குள் இழுத்துச் செல்கிறது.

கதிராட்டம்

ம லர்ப்புதரை  ஊடுருவும்  வெய்யோனின்  கதிரொன்று காய்வதை  மறந்து விளையாடத் துவங்கி விடுகிறது.