Skip to main content

Posts

கடுவளிக்காலம்

                                                                                    நான் இப்போது                                             குடித்தே ஆக வேண்டும்                                 ...

கணேசகுமாரன் கவிதை

  சாகும்வரை சிரிப்பவன் அவன் ஆரம்பகால நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவன்தான் கைதட்டி ரசித்த மக்கள் உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள் கலைஞன் வீடு முழுவதும் விருதுகள் குவித்தான் மேலும் சில நாடகங்களில் வில்லனாக அவனே விரும்பி நடித்தான் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் சபித்தபடி விருதுகளையும் பரிசுகளையும் அவன் கையில் திணித்தனர் ஒரு நாளில் நிர்பந்திக்கப்பட்டான் கோமாளியாக நடிக்கும்படி சிரிப்பாய் சிரித்தது வாழ்க்கை அவ்வளவு பெரிதாக அவ்வளவு வலியாக அவ்வளவு கொடூரமாக எல்லோர் துயரங்களையும் விரட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தது மேலும் மேலும் அவனாலும் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை சிரித்து சிரித்துக் கண்ணீர் பெருகி ஆறாக ஓடி மேடையும் மக்களும் மிதக்கத் தொடங்கியபின்னும் நிறுத்துவதாயில்லை அவன் அத்தனை அச்சாகப் பொருந்திவிட்டது கோமாளித் தொப்பி பழைய கிரீடங்களைத் துறந்து ஆட்டம் தொடர்கிறது இனி மேடையிலிருந்து வீழும் வரை கோமாளியின் தர்பார்தான்.

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம்

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம் இன்றைய விஜயவாணி கன்னட தினசரியில் வந்துள்ளன. மொழியாக்கம் செய்த கன்னட கவி கார்பென்டருக்கும், உதவிய நண்பர் சீனிக்கும் சிவாஜிகணேசனின் முத்தங்கள்.. ತಮಿಳು ಕವಿ ಇಸೈ ( Isai Karukkal ) ಅವರ ಎರಡು ಪದ್ಯಗಳ ಅನುವಾದ ಇಂದಿನ ವಿಜಯವಾಣಿ ಪತ್ರಿಕೆಯಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಂಡಿದೆ. ಅನುವಾದವನ್ನು  Srinivasan Kannan  ಅವರ ನೆರವಿನಿಂದ ಮಾಡಿದ್ದೇನೆ. please watch today's Vijayavani daily. Tamil poet Isai's Kannada translated poems have published (translation:  VR Carpenter )

என் கழுத்துநரம்பு முறுக்குக் கம்பியாலானது

என் பள்ளித்தோழன் தன் உள்ளங்கைக்குள் ஐந்து தேன்முட்டாய்களை காட்டிமறைத்த போது நான் முதன்முதலாக என் தலையைத் திருப்பிக்கொண்டேன் என்று நினைவு பிறகு எத்தனையோ முறை வெடுக் வெடுக்கென்று திருப்பிக் கொண்டேன் என் காளைப் பருவம் முழுவதும் வெட்டி வெட்டி இழுத்தேன் எத்தனை திருப்பிற்கும் அறுந்து போகாத என் கழுத்து நரம்பு ஒரு மருத்துவ அதிசயம் நாம் என்னவோ கடவுளை கண்டபடி திட்டுகிறோம் உண்மையில் அவர் ஒரு பேருபகாரி இந்த வாழ்வில் ஒரு முறை கூட தலையைத் திருப்பிக் கொள்ளாதவர் தவிர மற்ற எல்லோரும் ஒரு சேர எழுந்துநின்று அவர்க்கு நன்றி சொல்லுங்கள் அவர் நம் தலையை திருப்பிக் கொள்ளுமாறு வைத்ததின் மூலம் அதை வெடித்துவிடுவதினின்று காத்தார்.

ஓட்டைவாளியில் நீர்சுமப்பவன்

இசையின் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள் “ ஐ முன் வைத்து...                                                                                                                             - சாம்ராஜ்- பத்து மணிக்கெல்லாம் நடைசாத்தப் பழகியவர்களின் பாழ்நிலத்தை நாம் பாதுகாக்கத்தான்  வேண்டுமா ?  என்று கவிஞன் லிபிஆரண்யாவின் கவிதையொன்று முடியும். அப்படியான நிலம்தான் இது. முரன்பாட்டின...

இரண்டு கவிதைகள்

1.நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன் கோடாக இளைத்து மேலெல்லாம் புண்ணாக முடைவீசும் குப்பைமேட்டில் எதையோ மோந்துபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியை பார்த்தேன் அதற்கு என் உதட்டிற்கும் உன் கழுத்திற்குமான முனகலில் பிறந்ததின் அதே சாயல் என் பழைய பூனைக்குட்டியே.. பழைய ப்புச்சுக்குட்டியே.. பழைய வெல்லக்கட்டியே.. பழைய மொசக்குட்டியே.. 2. ரிசல்ட் பயாப்ஸி டெஸ்டுக்கான முடிவுகள் வந்துவிட்டன மருத்துவர் மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு கருணையின் கண்களைக் காட்டினார் தோளைத் தட்டித் தந்து தைரியமாக இருக்கச்சொன்னார் நான் காதியில் ஒரு நீலக்கலர் சால்வை வாங்கிப் போத்திக்கொண்டேன்.

உனக்கு நீயே தான்

உனக்கு நீயே தான் சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மறந்த பொருட்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும் உனக்கு நீயே தான் நிலா காட்டிக் கொள்ள வேண்டும் நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ளவேண்டும் நாலாவது ரெளண்டில் உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ளவேண்டும் உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும் உன் தலையை அரிந்து உன் மடியில் போட்டுக் கொண்டு நீயே தான் கோதிவிட வேண்டும்.