Skip to main content

Posts

Showing posts from September, 2010

ஒப்பிலாமணியே போற்றி

ஒப்பிலாமணிப் புலவரின் இரண்டு பாடல்கள் [ காதல் நோய் வருத்தி இரவு நீள, இரவி தோன்றி விடியாததை எண்ணிச் சினந்து தலைவி தோழிக்கு உரைத்தது..] 1. ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ ? யான் வளர்த்த கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி திரண்டதோ கங்குல் தினகரனும் தேரும் உருண்டதோ பாதாளத்துள். [ தேர்- சூரியத்தேர்] [ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ- கடல் போல் கொந்தளிக்கிற இரவாம்] 2. அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப் புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான் செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி எனக்கு எத்தால் விடியும் இரா.

ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா

1. அவன் கனவில் ஸ்கூட்டிகள் மிதக்கின்றன. வெள்ளை, கருப்பு. அரக்கு, சில்வர் என வகைவகையானவை. எல்லாமும் முடுக்கப்பட்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடத் துவங்குகின்றன. ஒரு கம்பிக்கருவி எண்ணற்றவிரல்களால் ஒரே சமயத்தில் கண்டமேனிக்கு சுண்டப்படுகிறது. விறைத்து அதிரும் அதன் உடல் தாள மாட்டாது ஒருக்களித்து சாய்கிறது. ஸ்கூட்டிகள் மெல்ல மெல்ல வேகமாகி காற்றில் ஒரு காற்றாகும் தருணத்தில் துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன். 2. இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா? நின்று கொண்டிருக்கும் ஸ்கூட்டியின் மேல் படுத்துக்கொண்டு அதை வெறி கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருக்கும் மனநோயாளியின் புகைப்படமொன்று அதில் வந்துள்ளது. 3. இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை. நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை. திரும்பி வந்து பார்த்தால் சீட் கவரில் விந்துத் திட்டுக்கள். 4. அவனிடம் திடமான கொள்கைகள் இருக்கின்றன. மகத்தான லட்சியங்கள் இருக்கின்றன. அதை வலியுறுத்த அவனிடம் எண்ணற்ற புத்தகங்களும