Skip to main content

ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா

1. அவன் கனவில் ஸ்கூட்டிகள் மிதக்கின்றன.
வெள்ளை, கருப்பு. அரக்கு, சில்வர் என
வகைவகையானவை.
எல்லாமும் முடுக்கப்பட்டு
குறுக்கும் நெடுக்குமாக ஓடத் துவங்குகின்றன.
ஒரு கம்பிக்கருவி எண்ணற்றவிரல்களால்
ஒரே சமயத்தில்
கண்டமேனிக்கு சுண்டப்படுகிறது.
விறைத்து அதிரும் அதன் உடல்
தாள மாட்டாது
ஒருக்களித்து சாய்கிறது.
ஸ்கூட்டிகள் மெல்ல மெல்ல வேகமாகி
காற்றில் ஒரு காற்றாகும் தருணத்தில்
துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன்.

2. இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா?
நின்று கொண்டிருக்கும் ஸ்கூட்டியின் மேல் படுத்துக்கொண்டு
அதை வெறி கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
மனநோயாளியின் புகைப்படமொன்று
அதில் வந்துள்ளது.

3. இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்.

4. அவனிடம் திடமான கொள்கைகள் இருக்கின்றன.
மகத்தான லட்சியங்கள் இருக்கின்றன.
அதை வலியுறுத்த
அவனிடம்
எண்ணற்ற புத்தகங்களும் இருக்கின்றன.
ஒரு ஸ்கூட்டி வாசலில் நின்று கொண்டு
ஹாரணடிக்கிறது.
" எக்ஸ் க்யூஸ் மீ "
மகத்தான லட்சியங்களே!

5. அதிகாலை நீராடி
நெற்றியில் நீறு சாற்றி
" ஜலமலப்பேழை", " ஜலமலப்பேழை என்று
நூற்றியெட்டு முறை எழுதுகிறான் தினமும்.
எல்லாம் ஒரு ஸ்கூட்டியை பார்க்கும் வரை தான்.

Comments

Poem Hunter said…
scooty produced for that purpose. but you missed all the contigencies of Urumeengalatra nathi . . .

since?
//இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்.//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்
nanba, thankal thiru mukathai kaanbithal mattumea thankaludan naan uraiyaada mudiyum
\\துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன்.\\

:)))))))))))))
class nanba

Popular posts from this blog

தெய்வாம்சம்

தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.

  வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க வ…

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன். “ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை சத்யன் ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம். என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை ’’திட்டமிட்டு உருக்கிவிட்டார்.   என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அப்போது அவரது நிலா பார்த்தல், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய புத்தகங்களால் வசீகரிக்கப்ட்டிருந்தேன். புத்தகத்தோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அது அவரது மொழியிலேயே இருக்க வேண்…

ஊடுருவல்

சோமனூர் பஸ்  ஸ்டாண்டில்
கொய்யாப் பழம் விற்கும்
சமூக விரோதியிடம்
கிலோவுக்கு ஒன்று குறைவதாக
சண்டையிட்டுக் கொண்டிருந்தான்
நக்சல்.
தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும்
தேசவிரோத  சக்தி
நக்சலின் தோளைத் தொட்டு
வத்திப்பெட்டி கடன் கேட்டான்.
பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை.
இருவருமாய்ச் சேர்ந்து
கடப்பாரை, மண் வெட்டி சகிதம்
14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர்.
அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.
 கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு
" ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி
அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது.
அந்த உரிமையில்
அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான்.
இப்படியாக
ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி
ஆகிய நால்வரும்
ஒரேயொரு குச்சியில்
4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர்.
அப்போது
இமயம் முதல் குமரி வரை
எங்கெங்கும் பற்றியெரிந்தது.