
உங்கள் பால்யத்தைக் கேட்டால்,
நீங்கள்
கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ
விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய்
சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள்.
ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான்.
அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது.
நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன்.
பால்யத்தின் வாகனத்திலேறி
பால்யத்தின் கனவுகளோடு
தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல்.
அது கட்டிக்கொள்ள
எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே,
வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும்
பால்யத்தின் காற்றை
அது வீடு திரும்பும் வரையிலேனும்
பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே..
நம் இனிப்பினிப்பான கற்பனைகள்
ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்
கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன.
நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம்
நடுநடுங்கியாடி
தொப்பென்று கீழே விழுகிறது
Comments
வழக்கம்போல, நல்ல கவிதை.
“நண்பரே“என்ற விளிக்கப்படும் தகுதியை என்றேனும் பெறுவேன்?
காத்திருக்கிறேன்..
தமிழன் ஒரு இளிச்சவாயன். ஜடம்.
" சனிக்கிழமைதான்" போல
உங்கள் எல்லோரோடும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாட முடியாத ஏக்கத்தை உங்களது பதிவு பல மடங்காக்கிவிட்டது.
இசை கூட்டத்தில் நல்ல பிள்ளையாக வெகு அமைதியாக இருந்தாரே என்?
சமயவேல்