Sunday, March 18, 2012

நெடுவெங்கோடை

சாலையின் தார் உருகி வழிந்து
வாகனங்கள் வழுக்கி விழுந்தன‌‌


தர்ப்பூசணிப் பழத்தில் தீ பிடித்துக் கொண்டது

என் உடலில் இருந்து
கல் உப்புகளை வழித்தெடுத்தேன்

பதினோரு ஆண்டுகள் கழித்து
மின்சாரம் வந்திருக்கிறது
நண்பா
அந்த ஃபேனை 20 ல் வை !

1 comment:

ச.முத்துவேல் said...

பரவாயில்லையே.அங்க மின்சாரம் வந்துடுச்சா!! வாழ்த்துக்கள்.