
மதுரை மாநகரின்
இச் சனிக்கிழமை நள்ளிரவில்
ஒரு டாஸ்மாக்கிலிருந்து
டோக் நகருக்கு போய்க்கொண்டிருக்கிறது
இருசக்கரவாகனமொன்று.
இப்போதந்த வாகனத்தில்
ப்ரேக் இல்லை
ஹாரன் இல்லை
லைட் இல்லை
ட்யூபும் டயரும் கூட இல்லை
ஒரு எக்ஸலேட்டர் மட்டும்
அது கூட ஒரு உற்சாக புலியின் கையிலிருக்கிறது
உற்சாகபுலிக்கே கூட ஒரு கை மட்டுமே இருக்கிறது
தலை தொங்கிவிட்டது
எதிரே நிற்கும் கனத்த மின்கம்பத்திற்கு
புலியை குட்டியிலிருந்தே தெரியும்
அது கவியானதும் தெரியும்
இன்று காலையில் தான்
காப்பியமுயற்சி ஒன்றிற்கு காப்புப்பாடல் எழுதி வைத்திருப்பதும் தெரியும்
" உ...................ம்ம்ம்ம்.... "
எனும் கனைப்பொலி
நெருங்கி முட்டும் கணத்தில்
ஒரு 60 டிகிரி சாய்ந்து எழுகிறது மின்கம்பம்.
காலைவணக்கம் கவிஞரே !
( ஸ்ரீதர் ரங்கராஜிற்கு )
Comments